விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாஞ்சார் கிராமத்தில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இருந்த சீமை கருவேல மரங்களை முனீஸ்பாண்டி என்பவர் அகற்றிய போது பழங்கால மண் கலயம் ஒன்று கிடைத்தது. அதனை உடைத்து பார்த்தபோது பழமையான பூஜை பொருட்கள் மற்றும் சாமி சிலைகளை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த முனீஸ்பாண்டி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் காரியாபட்டி தாசில்தார் தவழ்ந்த நிலையில் இருந்த கண்ணன், கிருஷ்ணன், அம்மன், கருடாழ்வார் போன்ற சிலைகள் மற்றும் கரண்டி, மணி போன்ற பூஜை பொருட்களை கைப்பற்றி தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதனை அடுத்து வருவாய்த் துறையினர் அந்த சிலைகள் ஐம்பொன் சிலைகளா? அல்லது உலோக சிலைகளா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.