சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சாய்பாபாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தில் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாய்பாபா ஜீவசமாதி அடைந்த நாள் அனுசரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சாய்பாபாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.