Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சீரமைக்கப்படாத சாலைகள்…. அலட்சியம் காட்டும் அதிகாரிகள்…. சிரமப்படும் கிராம மக்கள்…!!

சாலையை சீரமைத்து தருமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் நட்டிபாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து கோதாவடி மற்றும் கிணத்துக்கடவு செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் மழை நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியே வரும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகிறது.

இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட விவசாய பொருட்களை அவ்வழியே கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம்  பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே தாமதம் காட்டாமல் இந்த சாலையை சீரமைத்து தருமாறு கிராம மக்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |