மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் இன்று முதல் டிசம்பர் 30 வரை மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரை செய்ய உள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
\இந்நிலையில் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன், திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை மூன்றாம் கட்டமாக தேர்தல் பரப்புரை செய்ய உள்ளார். சீரமைப்பும் தமிழகத்தை எனும் முழக்கத்துடன் தேர்தல் பரப்புரை நடந்து கொண்டிருக்கிறது.