சீரற்ற மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய சில எளிமையான வழிமுறைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம்.
இயல்பாக ஒரு பெண் 21 நாள் முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படவேண்டும். அப்படி ஏற்படவில்லை என்றால் இது இயல்பான மாதவிடாயாக கருதப்படாது. இப்பொழுதுள்ள காலத்தில் பெண்களிடம் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை, வயிறு வலி, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சினைகள் உள்ளது. சரியான விகிதத்தில் உள்ள சத்தான உணவுகளை நாம் சாப்பிடும் போது, சரியான அளவு நீரை அருந்தும் போது, உடற்பயிற்சி செய்யும் போது ஒழுங்கான மாதவிடாய் ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் காரணமாக மாதவிடாய் சுழற்சி தடைபடுகிறது.
கடுமையான மனஅழுத்தம் இருந்தால் அது கட்டாயம் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை ஏற்படுத்தும். மன அழுத்த பிரச்சனையால் மாதவிடாய் தொடர்பான ஹார்மோன்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு மாதவிடாய் தள்ளிப்போகும் அல்லது முன்னதாக ஏற்படும். மன அழுத்தத்தை குறைக்க பெண்கள் முதலில் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய வேண்டும். இதை செய்து வந்தாலே பகுதி மன அழுத்த பிரச்சனை சரியாகிவிடும். தோட்டக்கலை, தையல் மற்றும் இசை போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுதல், மாலை நேரங்களில் தியானம் பிரார்த்தனை போன்ற மன அமைதியை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுதலின் மூலம் மன அமைதியை ஏற்படுத்த முடியும் .
சாப்பிட கூடாதது:
அன்னாச்சி பழம் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால் அன்னாசி பழத்தை அதிக அளவில் சாப்பிட கூடாது. பப்பாளி பழம் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். இதில் உள்ள கரோட்டின் இஸ்ரோவின் போன்றவை ஹார்மோனை தூண்டும் வல்லமை உடையது. இதை சாப்பிடும்போது மாதவிடாய் குறைபாடுகள் அகலும். மாதவிடாய் காலங்களில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் பப்பாளியில் இருந்தாலும் அளவு என்பது மிக முக்கியம்.
ஒரு டம்ளர் நீரில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஓம விதைகளை ஊற வைத்து குடித்து வந்தால் மாதவிடாய் தாமதம் தொடர்பான பிரச்சினை சரியாகும். ஓமம் விதை கருப்பையை சுற்றி அமைந்துள்ள உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். ஓம விதையுடன் இஞ்சி, தேநீர், தேன் கலந்து குடித்தால் மாதவிடாய் விரைவில் ஏற்படும். எள் விதையை வெல்லத்துடன் சேர்த்து உருண்டை செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை சரியாகும். இந்த முறையிலும் மாதவிடாய் பிரச்சினை சரியாகவில்லை என்றால் நீங்கள் உடனே மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.