நடிகை வனிதா ஹரிஹரன் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை சீரியல்களில் கதாநாயகன், கதாநாயகிக்கு தங்கை வேடத்தில் நடித்து பிரபலமடைந்தவர் வனிதா ஹரிஹரன். மேலும் இவர் டார்லிங், செஞ்சிட்டாலே என் காதல ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் மகராசி சீரியலில் ராகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதன்பின் வனிதா திடீரென சீரியலை விட்டு விலகி தனது கணவருடன் பெல்ஜியம் சென்றுவிட்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் வனிதா இந்தியா திரும்பியுள்ளார்.
இந்நிலையில் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை வனிதா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் ‘எனக்கு திருமணமாகி நான்கு வருடம் ஆகிவிட்டது. என்னுடைய கேரியருக்காக குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டோம். இப்போது குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததால், சீரியலில் இருந்து வெளியேறினேன். நான் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தேன். அது வெறும் நடிப்பு தான் என்றாலும் கூட என் குழந்தையை பாதித்து விடக்கூடாது என நினைத்தேன். இதனால் தான் சீரியலில் இருந்து விலகினேன்’ எனக் கூறியுள்ளார்.