சூப்பர் சிங்கர் பிரபலம் மூக்குத்தி முருகன் ஈரமான ரோஜாவே சீரியலில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலருக்கும் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது . அந்த வகையில் சூப்பர் சிங்கர் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மூக்குத்தி முருகன் .
மேலும் இவர் இந்த சீசனின் டைட்டிலை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மூக்குத்தி முருகன் முதல் முறையாக சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஈரமான ரோஜாவே சீரியலில் சிறப்பு விருந்தினராக மூக்குத்தி முருகன் கலந்து கொண்டுள்ளார்.