ரோஜா சீரியல் நடிகர் சிப்பு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் .
சன் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. இந்த சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி.யில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் சிப்பு சூரியன் கதாநாயகனாகவும் பிரியங்கா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் சிப்பு கன்னட திரையுலகை சேர்ந்தவர் என்பதால் ஆரம்பத்தில் இந்த சீரியலில் தமிழில் பேச கஷ்டப்பட்டார் .
தற்போது இவர் நன்றாக தமிழில் பேச ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சிப்பு அளித்த பேட்டியில் ‘ரோஜா சீரியலோடு நான் சின்னத்திரையில் நடிப்பதை நிறுத்தப் போகிறேன். நான் படங்களில் ஆர்வம் காட்ட விரும்புகிறேன். ஏற்கனவே தமிழ் மற்றும் கன்னடத்தில் படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட அவரது ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர் .