Categories
தேசிய செய்திகள்

சீரியல் கில்லர் ஜோலி.. சிறையில் தற்கொலை முயற்சி… காரணம் என்ன..?

சீரியல் பாணியில் தன்னுடைய குடும்பத்தில் அனைவர்க்கும் விஷம் வைத்து கொன்ற பெண் சிறைவாசம் அனுபவித்து வரும் வேளையில் தற்கொலைக்கு முயற்சி..!

கேரளாவில், உணவில் சைனைடு  கலந்து கொடுத்து கணவர் உட்பட குடும்பத்தினர் 6 பேரை அடுத்தடுத்து தீர்த்துக்கட்டிய  சீரியல் கில்லர் ஜோலி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோழி கூடு மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு இன்று காலை தனது மணிக்கட்டை அறுத்து அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

இதை கண்ட சிறைக்காவலர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஜோலிக்கு  சிறைக்குள் ஆயுதம் கிடைத்தது என்பது போலீசாரின் ஒரு கேள்வியாக உள்ளது.

சொத்துக்காக ஆசைப்பட்ட இவர் 2002ம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு காலத்திற்குள் தனது கணவர், மாமனார், மாமியார் என 6 பேரை  அடுத்தடுத்து தீர்த்துக்கட்டினார்.

மேலும் பலரை அவர் கொலை செய்ய திட்டமிட்டு  இருந்ததும் அம்பலமானது.  கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர் மேத்யூ உட்படமேலும்  இருவர் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |