பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை பற்றி ஆர்டிஓ இன்று முதல் விசாரணையைத் தொடங்க உள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகை கடந்த வாரம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவரின் தற்கொலை தொடர்பாக கணவர் ஹேம்நாத் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சித்ராவின் பெற்றோரிடம் ஆர்டிஓ விசாரணை தொடங்குகிறது.
அதன்பிறகு ஓட்டல் ஊழியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவரிடம் விசாரணை நடத்த உள்ளனர். ஏற்கனவே ஹேம்நாத் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வருவதால், அவரிடம் இன்று தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது. அதில் மாறுபட்ட தகவல்கள் வெளியானால் ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகே முழுமையான தகவல்கள் வெளியே தெரியவரும். அதுமட்டுமன்றி விசாரணையை விரைந்து முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.