சீரியல் நடிகை மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் பிரபல நடிகரின் பேரன் என்பது தெரியவந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் மைனா நந்தினி . இவர் நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார் .மேலும் இவர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது .
குழந்தை பெற்ற பிறகும் நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வரும் நந்தினி தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் சிவாஜி கணேசனின் படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்த பழம்பெரும் நடிகர் ராமதாஸ் அவர்களின் பேரன் தான் மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் என்பது தெரியவந்துள்ளது .