Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியல் நடிகை ரேஷ்மாவுக்கு எப்போது திருமணம்?… அவரே சொன்ன தகவல்…!!!

திருமணம் குறித்த கேள்விக்கு சீரியல் நடிகை ரேஷ்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரேஷ்மா . இவரும் இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் மதன் பாண்டியன் என்பவரும் காதலித்து வருகின்றனர்.

தற்போது ரேஷ்மா, மதன் இருவரும் இணைந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர்ஸ் என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ரேஷ்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் ரேஷ்மாவிடம் திருமணம் எப்போது ? என கேட்டுள்ளார். இதற்கு ரேஷ்மா ‘ மிக விரைவில்’ என பதிலளித்துள்ளார்.

Categories

Tech |