Categories
மாநில செய்திகள்

சீருடைப் பணியாளர் தேர்வில் முறைகேடு : சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் போல் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக திருவண்ணாமலையை சேர்ந்த 15 தேர்வர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். காவல் துறையில் ஜெயில் வார்டன் தீயணைப்பு துறையினர், பெண் காவலர்கள் உள்ளிட்ட இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு மார்ச் 2019ம் ஆண்டு நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து கடத்த பிப்., மாதம் தேர்வானவர்களின் இறுதிப்பட்டியல் வெளியானது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 1019 பேரும், விழுப்புரத்தில் 263 பேரும் தேர்வானதாக வெளியானது. இவர்கள் அனைவரும் ஒரே தனியார் நிறுவனத்தில் பயிற்சி பெற்றது தெரியவந்தது. இந்நிலையில் சீருடை பணியாளர் உயர் அதிகாரிகள் துணையுடன், தனியார் நிறுவனத்தில் உடன்பாடு ஏற்பட்டு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதனால் இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  சீருடை பணியாளர் உயர் அதிகாரிகள் துணையுடன் இந்த முறைகேடுகள் நடந்துள்ளதால் சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை, எனவே சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இறுதி பட்டியலை நிறுத்தி வைத்து வழக்கு முடியும் வரை தேர்வு நடைமுறைகளுக்கு தடை கோரியுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Categories

Tech |