Categories
மாவட்ட செய்திகள்

“சீர்காழி அருகே 5 பள்ளி மாணவிகளுக்கு திடீர் வாந்தி- மயக்கம்”….. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை….!!!!

சீர்காழி அருகே உள்ள பள்ளியில் 5 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி அருகே இருக்கும் புளிச்சக்காடு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் 17 மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். மேலும் மூன்று ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணி அளவில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பவதாரணி, யாழினி, கனிஷ்கா, அனுஷ்கா உள்ளிட்ட ஐந்து மாணவிகளுக்கு திடீரென வாந்தி- மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்ற மாணவிகளையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த நிலையில் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட என்ன காரணமாக இருக்கும்? வீட்டில் வழங்கப்பட்ட உணவில் ஏதோ குறைபாடா? அல்லது குடிநீரில் குறைபாடா? என பல்வேறு கோணங்களில் சுகாதார அலுவலர் மற்றும் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |