Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீர்காழி கோமளாம்பிக்கை கோவில்… தீமிதி திருவிழா… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!!

மயிலாடுதுறை சீர்காழியில் கோமளாம்பிகை கோவிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காளியம்மன் எனும் கோமளாம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் மார்ச் மாதம் 5-ஆம் தேதி இந்த கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து அலகு காவடிகள், பால்குடம் எடுத்து, கரகம் எடுத்து பக்தர்கள் மேளதாளத்துடன், வானவேடிக்கையோடு ஊர்வலமாக தேர் வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம், பிடாரி கீழவீதி, தெற்கு வீதி, தேர் மேல வீதி வழியாக கோவிலுக்கு வந்தடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகங்கள் அலங்காரங்களோடு தீபாராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர். அதை தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்தனர். அதன்பின் முத்துப்பல்லக்கில் அம்மன் வீதிஉலா வரும் காட்சிநடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை பொதுமக்கள் செய்துள்ளனர். இதற்கு சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

Categories

Tech |