Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீர்காழி சட்டைநாதர் கோவில்… திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி சட்டைநாதர் கோவிலில் நேற்று முன்தினம் திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் திருவிழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் சிறப்பு வாய்ந்த சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம்தோறும் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் விழா சித்திரை மாதம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி சட்டைநாதர் கோவிலில் இந்த வருடம் நேற்று முன்தினம் திருமுலைப்பால் விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி பிரம்ம தீர்த்தக்கரையில் திருஞானசம்பந்தர் பிரம்மபுரீஸ்வரர் சன்னதியில் இருந்து புறப்பட்டு எழுந்தருளினார். அங்கு சிவாச்சாரியார்கள் திருஞானசம்பந்தருக்கு தீபாராதனை, சிறப்பு அபிஷேகம் ஆகியவற்றை செய்தனர். அதன்பின் திருஞானசம்பந்தர் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்பாடு நடைபெற்றது.

அப்போது உமா மகேஸ்வரி அம்மன் மலைக்கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தீர்த்தக் கரைக்கு எடுத்து வரப்பட்டு எழுந்தருளினார். இதையடுத்து தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் பகல் 12 மணி அளவில் தங்க குடத்தில் உள்ள பால் கிண்ணத்தில் எடுத்து திருஞானசம்பந்தருக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சிவபெருமான-உமாமகேஸ்வரி எழுந்தருளி திருஞானசம்பந்தருக்கு காட்சியளித்தனர். அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |