Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீர்காழி பகுதியில் குயில் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது …!!

நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் குயில் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குயில்கள் வேட்டையாடப்படுவது கிடைத்த தகவலை அடுத்து வனச்சரக அதிகாரிகள் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்களாச்சேரியில் அதிரடி சோதனை நடத்தினர். வனச்சரக அதிகாரி திரு. குமரேசன் தலைமையிலான குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் பகுதியைச் சேர்ந்த ராகு காரைக்காலைச் சேர்ந்த தங்கையின் மற்றும் அன்பரசன் ஆகியோரை விசாரித்தபோது அவர்கள் குயில் வேட்டையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 14 குயில்கள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் அனைத்தும் பறக்கவிடப்பட்டன. குயில் வேட்டையில் ஈடுபட்ட மூவருக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

Categories

Tech |