சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மூவன்பட்டியில் சிறப்பு வாய்ந்த முத்தான் கருப்பர்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கிராமத்தார் சார்பில் மூவன்பட்டி பொதுதொழுவில் இருந்து ஜவுளி எடுத்து வரப்பட்டது. இதில் முதல் மரியாதை முத்தான் வயலில் இருந்த கோவில் மாடுகளுக்கு செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக தொழுவிலிருந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்பகுதியை சேர்ந்த காளையர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினார்கள். காளைகளை பிடித்த காளையர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளுக்கும் மஞ்சுவிரட்டு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது.