மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சருகனி கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், தசரதன், முருகன், தேவகோட்டை யூனியன் தலைவர் பிர்லா, மாவட்ட துணைச்செயலாளர் ஆரோக்கிய ராஜ், இளைஞர் இளம்பெண் பாசறை பிரபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 17 -க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு காளைகளை அடக்கியுள்ளனர். இதில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ ,அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.