மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லலில் கிராமத்தில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மாசி விழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர்.
இந்நிலையில் காளைகள் தாக்கியதால் 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவ முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காளைகளை அடக்கி வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.