Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகள்…. அடக்கிய மாடுபிடி வீரர்கள்…. பரிசு வழங்கிய எம்.எல்.ஏ…!!

சிறப்பாக நடைபெற்ற விழாவில் காளைகள் சீறி பாய்ந்ததை பொதுமக்கள் கண்டு ரசித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் பகுதியில் சிந்தகம்பள்ளி கிராமத்தில் காளைகள் போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் சாம்பல் பள்ளம், பர்கூர், கிருஷ்ணகிரி, ஜோலார்பேட்டை, குடியாத்தம், ஆந்திர மாநிலம் குப்பம், சித்தூர்  ஆகிய பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ளன.

இந்த போட்டியில் இரண்டு பக்கமும் தடுப்புகள் அணைக்கப்பட்டு காளைகள் ஓடுவதற்கு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதையில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதில் பலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விழாவை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் வெற்றி பெற்ற காளைகளுக்கு பர்கூர் முன்னாள் எம்.எல்.ஏ சிறப்பு பரிசுகளை வழங்கியுள்ளார்.

Categories

Tech |