Categories
தேசிய செய்திகள்

“சீறி பாய்ந்த கார்”…. அடுத்தடுத்து நேர்ந்த விபரீதம்…. 3 பேர் பலி…. பதற வைக்கும் வீடியோ….!!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா என்ற பகுதியில் லாரி ஒன்று கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்தது. அப்போது பயங்கர வேகத்தில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் அந்த காரின் முன்பகுதி படுவேகத்தில் லாரியின் அடியில் சென்று மோசமான நிலையில் சிக்கியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது.

 

பின்னர் சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த லாரியை எடுத்த பிறகு காரில் இருந்தவர்களின் நிலையை பார்த்துள்ளனர். அதில் 3 பேர் பரிதாபமாக காரிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

Categories

Tech |