விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் இந்தியாவின் கனவு திட்டம் சுகன்யான் திட்டம் ஆகும். இந்த திட்டம் பற்றி பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றும்போது முதன்முதலாக தெரிவித்தார். இந்த திட்டம் ரூ.10,000 கோடியில் நிறைவேற்றப்படும் என்று அப்போது அவர் குறிப்பிட்டு இருந்தார். ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் போன்ற இந்தியாவின் சுகன்யான் விண்கலத்தில் வீரர்களை பூமியின் தாழ்வட்டப்பாதைக்கு அனுப்பி ஏறத்தாழ ஏழு நாட்கள் விண்வெளி ஆய்வுக்கு பின்னர் அவர்களை மீண்டும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதால் இந்த சுகன்யா திட்டம் ஆகும். இந்த திட்டம் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் டெல்லி நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் சுகன்யான் திட்டத்தை சுதந்திர தின நாள் அமுதப்பெரு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு நிறைவேற்றுதற்கு மத்திய அரசு முதலீடு திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா பெருந் தொற்று காரணமாக அதில் செல்ல வேண்டிய வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுகன்யான் திட்டத்தின் ஆளில்லா விண்கலத்தை செலுத்தும் முதல் சோதனை பயணம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும். அதனை தொடர்ந்து வயோம் மித்ரா என்ற பெண்ணை போன்று தோற்றமளிக்கும் ரோபோ அடுத்த ஆண்டு அனுப்பி வைக்கப்படும். சுகன்யா திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பி வைப்பதற்காக 4 போர் விமானிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ரஷ்யாவில் அடிப்படை பயிற்சி பெற்றுள்ளனர். இரண்டு சோதனை பயணங்களில் முடிவை ஆராய்ந்த பிறகு இரண்டு வீரர்கள் 2024 ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.