Categories
சினிமா தமிழ் சினிமா

சுகமாய்க் கடந்துவிடு சுவாசமாகி விடு… புயலுக்கு கவிதை எழுதிய கவிப்பேரரசு…!!

கவிஞர் வைரமுத்து நிவர் புயல் பொதுமக்களுக்கு சேதமில்லாமல் கரையை கடக்க வேண்டும் என்று கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழகத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரசுகளும் பொதுமக்களும் நிவர் புயலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வுகளை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகர்கள் ,நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ட்விட்டர் மூலம் பொதுமக்கள் யாரும் இன்று ஒரு நாள் வெளியே வரவேண்டாம் ,நிவர் புயலை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நிவர் புயல் பொதுமக்களுக்கு சேதமில்லாமல் கரையை கடக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |