Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுகரை சமநிலைபடுத்த… இந்த ஸ்டப் சாப்பிடுங்க…!!!

பாகற்காய் ஸ்டப் செய்ய தேவையான பொருட்கள்:

பாகற்காய்                   –  9
உருளைக்கிழங்கு    – கால் கிலோ
தக்காளி                        – 1
வெங்காயம்                – 2
பச்சை மிளகாய்       – 3
மஞ்சள் பொடி           – அரை டீஸ்பூன்
மல்லி பொடி              – 1 ஸ்பூன்
மிளகாய் பொடி       – இரண்டு டீஸ்பூன்
எலுமிச்சம்பழம்       – ஒன்று
எண்ணெய்                 – தேவையான அளவு

செய்முறை: 

முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். பாகற்காயின் மேல் தோலை சீவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

பின்பு தண்ணீரை வடித்துவிட்டு சிறிது நேரம் வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை  போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதில் வேகவைத்த உருளை, பாகற்காய், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி மல்லி பொடி சேர்த்து நன்கு கிளறவும்.

இறுதியில் அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் எலுமிச்சை பிழியவும். இப்போது சுவையான பாகற்காய் ஸ்டப் தயார்.

Categories

Tech |