சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கு தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வர தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்ற அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை தங்களிடம் பெற வலியுறுத்தி 40 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் உயர் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வந்த கல்லூரி, தற்போது சுகாதாரத் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டுள்ளது. அதனால் இனி சுகாதாரத்துறையின் கீழ் தான் அந்த கல்லூரி செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.