பிரபல நாடு அமெரிக்கா மற்றும் உலக வங்கியிடம் இருந்து கடன் பெற்றுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் 139 நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா போரினால் உக்ரைன் நாட்டில் உள்ள ஏராளமான மருத்துவ ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனையடுத்து போரின் காரணமாக சில மருத்துவமனைகள் மூடப்பட்டதோடு, ரஷ்ய இராணுவத்தால் சில மருத்துவமனைகள் குண்டு வீசி தகர்க்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சுகாதார பணியாளர்கள் தங்களுடைய கடமையை செய்து வருகிறார்கள்.
இவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்கா மற்றும் உலக வங்கிய இடம் இருந்து உக்ரைன் கடன் வாங்கியுள்ளது. அதன்படி 1.7 மில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிள்ளது. இந்த பணத்தின் மூலம் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் சம்பளம் மற்றும் பிற அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படும். மேலும் சுகாதார மந்திரி 1.7 மில்லியன் டாலர் என்பது ஒரு முதலீடாகும் என்றும், அது எங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் எனவும் கூறியுள்ளார்.