குளிர்பான பாட்டில்கள் சுகாதார மற்ற முறையில் சுத்தம் செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் குளிர்பானம் விற்பனை செய்யும் ஒரு கடை அமைந்துள்ளது. இந்த கடையில் அனைவரும் விரும்பி குடிக்கக்கூடிய பாதாம் பால், பிஸ்தா மற்றும் குளிர்ச்சியான மசாலா பால் போன்றவைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடையில் குளிர்பானங்களை வாங்கி குடித்த பிறகு குப்பை தொட்டிகளில் மக்கள் போடும் பாட்டில்களை சேகரித்து அதை சுகாதார மற்ற முறையில் சுத்தம் செய்து மீண்டும் அந்த பாட்டில்களில் பாதாம் பாலை ஊற்றி கடைக்காரர் விற்பனை செய்கிறார்.
இதைப்பார்த்த ஒருவர் தன்னுடைய செல்போனில் புகைப்படம் எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் பரவியதால் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் சுகாதார மற்ற முறையில் குளிர்பானம் விற்பனை செய்யும் கடை மீது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.