கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அழகிய மண்டபம், திருக்கணங்கோடு, கருங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 16 கடைகளில் உபயோகப்படுத்திய 40 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு 32 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதனையடுத்து சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக திருக்கணங்கோடு பகுதியில் இருக்கும் 2 கடைகள், கருங்கல் பகுதியில் இருக்கும் ஒரு கடை, அழகிய மண்டபம் பகுதியில் இருக்கும் ஒரு பேக்கரி என 4 கடைகளை 14 நாட்களுக்கு மூடுமாறு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் அதிரடியாக உத்தரவிட்டார். இதனையடுத்து 4 கடைகளிலும் அதிகாரிகள் கூறிய குறைகளை சரி செய்த பிறகு மீண்டும் ஆய்வு நடத்தப்படும். அப்போது சுகாதாரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டால் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Categories