Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சுக்குக்கு மிஞ்சிய மருந்து எதுவும் இல்லை”… சளி, இருமல், காய்ச்சலுக்கு உகந்த மருந்து… கட்டாயம் யூஸ் பண்ணுங்க…!!

நாட்டு வைத்தியத்தில் மிக முக்கியமான பொருள்களில் ஒன்று சுக்கு. சுக்கை மிஞ்சிய வைத்தியம் எதுவும் இல்லை என்று கூறுவார்கள்.

இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இதில் பல மருத்துவ பயன்கள் உள்ளது .சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம். சுக்கு மிளகு திப்பிலி என்ற மூன்று மூலிகைகள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இஞ்சியை  போல இருக்கும் இந்த சுக்கு ஒரு விவசாய பயிர். வேரில் மஞ்சள் போலவே இருக்கும்.  பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.

இதன் பயன்கள்

ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது. தலைவலியைப் போக்க உதவுகிறது. இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. கொழுப்பை குறைக்கிறது. மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி சுவாச தசைகளை சீராக்குகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் ஆகியவை சுத்தம் செய்ய இந்த சுக்கு பெருமளவு பயன்படுகிறது .

Categories

Tech |