Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய அரசு பேருந்து…. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 30 பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மஞ்சவாடியில் இருந்து அரசு டவுன் பேருந்து அரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சிவகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ஆதிமூலம் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் சேலம்- அரூர் நெடுஞ்சாலை தண்ணீர் தொட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அரூர் நோக்கி வேகமாக வந்த தனியார் பேருந்து அரசு பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்து அபய குரல் எழுப்பியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த செல்வம், கார்த்திகா, பள்ளி மாணவிகளான ஹரி தர்ஷினி, அபிராமி, அன்பரசி உட்பட 30-க்கும் மேற்பட்டோரை மீட்டு சேலம், அரூர் பகுதிகளில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து அறிந்த அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், தாசில்தார் சுப்பிரமணி ஆகியோர் படுகாயம் அடைந்தவர்களை நேரில் சென்று பார்த்துள்ளனர். இதனையடுத்து மாணவர்கள் தர்ஷன், சிவா திருமலை, துர்கா தேவி, அனிதா ஆகியோர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தனியார் பேருந்து ஓட்டுநர் பொன்மலை என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |