அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை கணேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் ராஜேந்திரன் என்பவர் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குன்னம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது ஆட்டோ டிரைவரான பாலமுருகன் என்பவர் பேருந்தை நோக்கி கற்களை வீசியுள்ளார்.
இதனால் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்துவிட்டது. இது குறித்து கணேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.