கார் மீது வேன் மோதிய விபத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னியகவுண்டம் பாளையம் பகுதியில் பனியன் நிறுவன தொழிலாளியான பண்ணாரி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோபால்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவரது கால்களில் நீர் கட்டி இருந்துள்ளது.அதற்கு மந்திரித்து கயிறு கட்டுவதற்காக பண்ணாரி தனது மகனுடன் நேற்று காலை ஆமந்தகடவு பகுதிக்கு காரில் சென்றுள்ளார். இந்நிலையில் சின்னபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த வேன் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் பண்ணாரியும், கோபாலும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று தந்தை, மகன் ஆகியோரின் உடல்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து காயமடைந்த வேன் ஓட்டுனரான அருண் பிரசாத் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.