Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. தம்பதி பலி; 2 பேர் படுகாயம்….. கோர விபத்து….!!!

கார் விபத்தில் சிக்கியதால் தம்பதி பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையார் காந்தி நகரில் வங்கி ஊழியரான பிஸ்வாராஜன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் அஞ்சனா(32), பக்கத்து வீட்டில் வசிக்கும் பிஜய்குமார் சரண்(75), அவரது மனைவி மீரா சரண்(67) ஆகியோருடன் காரில் கேரளா நோக்கி சென்றுள்ளார். இந்த காரை பிஸ்வாராஜன் ஓட்டியுள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலூர் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மீரா சரண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு வரைந்து சென்ற உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிஜய்குமார் சரண் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |