Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!

கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 5 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீபெரும்பத்தூரிலிருந்து அரக்கோணம் நோக்கி வேகமாகச் என்ற கண்டெய்னர் லாரி கார் மீது பயங்கரமாக மோதியது இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |