Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் சூரியநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான உதயகுமார் என்ற மகன் உள்ளார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தை மகன் இருவரும் காரில் பெங்களூரு நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலை நாகம்பட்டி பிரிவு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் பழுதாகி நின்றது. இதனால் உதயகுமார் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டார்.

அதன் பிறகு தந்தை மகன் இருவரும் காரில் இருந்து கீழே இறங்கி சாலையோரத்தில் நின்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கரூர் நோக்கி வேகமாக சென்ற லாரி பழுதாகி நின்ற கார் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கிவிட்டது. ஆனால் தந்தை மகன் இருவரும் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |