கார் மீது லாரி மோதிய விபத்தில் திமுக பிரமுகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நாராயணபுரம் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குபேந்திரன்(45) என்ற மகன் இருந்துள்ளார். தி.மு.க பிரமுகரான குபேந்திரன் திருவள்ளூர் பகுதியில் இருக்கும் சினிமா திரையரங்கு, விடுதி போன்றவற்றை நிர்வகித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆந்திராவில் தங்களுக்கு சொந்தமாக இருக்கும் விவசாய நிலங்களை பார்வையிடுவதற்காக குபேந்திரன் காரில் சென்றுள்ளார். இதனை அடுத்து அங்கிருந்து குபேந்திரன் திருவள்ளூரில் இருக்கும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தரணிவராகபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் படுகாயமடைந்த குபேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குபேந்திரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.