Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய பேருந்து…. பயணிகளின் நிலைமை என்ன….? கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கண்டெய்னர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருந்து 30 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்த போது பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.

மேலும் பேருந்து ஓட்டுனர் கதிர்வேல், கிளீனர் மணி, பயணிகள் சண்முகப்பிரியா, ரம்யா உள்பட 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் கிரேன் மூலம் விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தியுள்ளனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |