தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் எவ்வளவு உயரப் போகிறது என்பதற்கான முழு தகவலும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். இந்நிலையில் சில சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயரப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சுங்கச்சாவடி வழியாக ஒருமுறை மட்டுமே பயணிக்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ரூபாய் 55 லிருந்து 65 ரூபாய் வரையிலும், ஒரு நாளில் பலமுறை பயணிக்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 85 லிருந்து 100 ரூபாயாகவும், மாத கட்டணம் 1960 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை மட்டும் பயணிக்கும் லாரி, இலகுரக வாகனங்களுக்கு 115 ரூபாய் சுங்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் பலமுறை பயணிக்கும் வாகனங்களுக்கு 150 ரூபாயாகவும் மாத கட்டணம் 3435 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஒருமுறை பயணிக்கும் பேருந்து மற்றும் லாரிகளுக்கு ரூபாய் 200 இல் இருந்து 230 ரூபாய் வரையிலும் பலமுறை பயணிக்கும் பேருந்து மற்றும் லாரிகளுக்கு 300-ல் இருந்து 350 வரையும் மாத கட்டணமாக 6,870 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.