சுங்க கட்டணம் பாஸ் விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளில் மாத கட்டண முறையில் பேருந்துகளுக்கு பாஸ் வழங்குவதில் 50 முறை தான் பயணிக்க வேண்டும் என்று கட்டுப்படுத்த கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. எத்தனை முறை பேருந்துகள் கடந்து செல்கிறதோ அதை ஏற்றார் போல மாதாந்திர சலுகை கட்டணம் பாஸ் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை ,விருதுநகர், திருச்சி தனியார் பேருந்து உரிமையாளர்கள் நல சங்கம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் நல சங்க செயலாளர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளையில் சாலைகள் முறையாக பராமரிக்க வேண்டும். சுங்கச்சாவடிகள் அவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், மாத கட்டணம் சலுகை, பாஸ் போன்றவை முறைப்படுத்த வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் இதனை விசாரணை செய்த ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.