சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் நடிகர், இசையமைப்பாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார் விஜய் ஆண்டனி. இவர் தற்பொழுது சுசீந்தரன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கின்றார். இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைக்க நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தாய் சரவணன் தயாரிக்கின்றார். படத்திற்கு வள்ளிமயில் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள்.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பானது இன்று தொடங்கியுள்ளது. படப்பிடிப்பை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் திரு.சக்கரபாணி துவங்கி வைத்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இத்திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்படுகின்றார்கள். மேலும் படபிடிப்பானது கொடைக்கானல், தேனி, காரைக்குடி, கோபிசெட்டிபாளையம், பழனி உள்ளிட்ட இடங்களில் நடக்க உள்ளது.