Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

சுசீந்திரன் இயக்கிய படமா வீரபாண்டியபுரம்… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் வீரபாண்டியபுரம் திரைப்படமானது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர் சுசீந்திரன். இவர் இயக்கத்தில் கடைசியாக சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியானது. தற்பொழுது இவர் இயக்கிய வீரபாண்டியபுரம் திரைப்படமானது வெளியாகி இருக்கின்றது. இத்திரைப்படத்தில் ஜெய், மீனாக்ஷி கோவிந்தராஜன், காளி வெங்கட், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஜெய் மாற்றம் மீனாட்சி காதலிக்கின்றனர். இதை அறிந்த இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கின்றனர். இறுதியில் மனம் மாறிய ஜெய் மீனாட்சியை அவரின் அப்பாவிடம் ஒப்படைக்க முயல்கிறார். ஊர் தலைவருக்கும் மீனாட்சியின் அப்பாவிற்கும் பகை உள்ளது. இதை மையமாக வைத்து கதை நகர்கின்றது.

சுசீந்திரனா இப்படிப்பட்ட கதையை கொடுத்துள்ளார் என ஆச்சரியப்படும் அளவிற்கு வீரபாண்டியபுரம் கதை இருக்கின்றது. இக்கதையானது பல திரைப்படங்களில் எடுக்கப்பட்டிருக்கின்றது. சுப்ரமணியபுரம் படத்தைப் போலவே இருக்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் விருப்பத்தின் பேரில் சிவ சிவ என்று வைக்கப்பட்டிருந்த பெயரை  வீரபாண்டியபுரம் என மாற்றி பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜெய்யும் சுப்பிரமணியபுரத்தில் இருந்த கெட்டப்பை போலவே  இப்படத்திலும் நடித்திருக்கின்றார். இத்திரைப்படமானது ரசிகர்கள் மனதில் சிறிதும் இடம் பிடிக்கவில்லை என்பதே எதார்த்தமான உண்மை.

Categories

Tech |