வெண்ணிலா கபடிக் குழு, பாண்டிநாடு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை போன்ற திரைப்படங்களை இயக்கிய சுசீந்திரன், அடுத்து இயக்கும் புது படத்துக்கு “வள்ளி மயில்” என்று பெயர் சூட்டியிருக்கிறார். இந்த படத்தில் விஜய்ஆண்டனி, சத்ய ராஜ், பாரதிராஜா போன்ற 3 பேரும் இணைந்து நடிக்கிறார்கள். ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய “ஜதி ரத்னலு” எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்த பரியா அப்துல்லா, “வள்ளி மயில்” ஆக நடிக்கிறார்.
“புஷ்பா” புகழ் சுனில், தம்பி ராமய்யா, சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லீ போன்றோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். “வள்ளிமயில்” திரைப்படத்திற்கு இமான் இசை அமைக்கிறார். ஒளிப் பதிவை விஜய் கே.சக்கரவர்த்தி கவனிக்க படத்தொகுப்பினை ஆண்டனி மேற்கொள்கிறார். இந்த படத்தின் கதை 1980களில் நடப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இத்திரைபடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் தயாராகி வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் துவங்கி தொடர்ந்து நடைபெற இருக்கிறது.