Categories
ஆன்மிகம் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில்…. ஸ்தல வரலாற்றினை அறிய…. கோவில் நிர்வாகத்தின் புதிய ஏற்பாடு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு வருகின்ற பக்தர்களுக்கு கோவில் பற்றிய ஸ்தல வரலாற்றினை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக திருக்கோவில் நிர்வாகம் கோவிலின் உள்ளே திருக்கோவில் நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் செலவில் ஆன்மீக புத்தக நிலையம் ஒன்று நிருவப்பட்டுள்ளது.

இந்த புத்தக நிலையம் இன்று முதல் செயல்பட தொடங்கியது. மேலும் கோயிலுக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் ஆன்மீக புத்தக நிலையத்தில் உள்ள புத்தகங்களை பார்வையிடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கியும் செல்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகமே ஏற்பாடு  செய்துள்ளது.

Categories

Tech |