Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டது… ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி..!!

அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித்தின் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள  நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் வில்சன் என்ற 2 வயது சிறுவன் கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் முயற்சித்தனர். ஆழ்துளை கிணறு அருகே ரிக் இயந்திரம் மூலம் துளையிடபட்டு பணிகள் நடந்தது.

பாறைகள் கடினமாக இருந்ததால் போர் வெல் உதவியால் துளையிடப்பட்டு பின்னர் ரிக் இயந்திரம் மூலம் அகலப்படுத்தப்பட்டது. மீட்பு பணி நேற்று இரவு நடைபெற்ற  போது துர் நாற்றம் வீசியது. இதனையடுத்து மருத்துவர்கள் அதனை உறுதி செய்தனர். பின்னர் மீட்பு படையினர் இறங்கி அவனை சடலமாக மேலே கொண்டு வந்தனர்.

உடனே ஆம்புலன்ஸ் மூலம் உயிரிழந்த சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு மணப்பாறை மருத்துவமனை வளாகத்தில் குழந்தை சுஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள் உதயகுமார், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து சுஜித்தின் உடல் பாத்திமா புதூர் கல்லறைப் பகுதியின் அருகே பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், பொதுமக்கள் சிறுவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் அமைச்சர்களும் உட்பட சுஜித்துக்கு அஞ்சலி செலுத்த நீணட வரிசையில் நின்றிருந்த பொதுமக்களின் அழுகுரல் அப்பகுதி முழுவதும் பரவியது. உடலை அடக்கம் செய்தபின்னரும் சுஜித்துக்கு அஞ்சலி செலுத்த மக்கள் சாரை சாரையாக இப்பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

Categories

Tech |