பெங்களூருவில் 24 மணி நேரமும் சுட சுட இட்லி பரிமாறும் வகையில் தானியங்கி இயந்திரம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.இந்த ரோபோடிக் இட்லி இயந்திரம் 10 நிமிடங்கள் வடை மற்றும் இரண்டு வகை சட்னியுடன் இட்லியை பரிமாறுகின்றது. இதன் அறிமுக வீடியோ அண்மையில் வெளியாகி சர்வதேச அளவில் வைரலானது. பெங்களூருவை சேர்ந்த ஃபிரஷ் ஹாட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் இட்லி தானியங்கி இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. காபி மெஷினை போலவே ஒரு சில நிமிடங்களில் இட்லி, சட்னி மற்றும் வடை ஆகியவற்றை இந்த இயந்திரம் சுடசுட பரிமாறுகின்றது.
Categories