Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலம்…. இரவோடு இரவாக தலையை வெட்டி சென்ற மர்ம நபர்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

திருப்பத்தூர் மாவட்டம் அருகே சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பெண்ணின் தலையை மர்மநபர்கள் வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் பாரதிதாசன் என்ற நகரில் கிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவரின் மனைவி மாதம்மாள் (45)உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரின் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு சுடுகாட்டில் சடலத்தை புதைத்தனர். இந்நிலையில் மாதம்மாள் புதைக்கப்பட்ட இடத்தில் பால் ஊற்றுவதற்காக மறுநாள் காலை உறவினர்கள் சென்றுள்ளனர். அப்போது மாதமாய் சடலம் அடக்கம் செய்த இடத்தில் பள்ளம் போடப்பட்டிருந்தது. உடனே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், மர்ம நபர்கள் பிணம் புதைக்கப்பட்ட இடத்திற்கு வந்து மாதம் ஆளின் பிணத்தை தோண்டி எடுத்து தலையை மட்டும் வெட்டி எடுத்துச் சென்றது தெரியவந்தது. அந்த இடத்தில் தலைமுடிகள் மற்றும் காலி மது பாட்டில்கள் இருந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |