தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடன் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள சங்கனாங்குளம் ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன் ஆவார். இவர் சுமார் 35 வருடங்களாக வித விதமான வேடம் அணிந்து அம்மனை தரிசித்து வருகிறார். சென்ற 4 வருடங்களுக்கு முன் இவருக்கு தொண்டை பகுதியில் கேன்சர் ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்ற நிலையில், மருத்துவர்கள் குணப்படுத்த முடியாது என கூறியுள்ளனர். அதன்பின் அம்மனை மனம் உருகி வழிபட்டு அவருக்கு புற்றுநோய் சரியாகியது.
இதனால் அம்மனுக்கு நன்றிகடன் செலுத்தும் வகையில் 4 வருடங்களாக சுடுகாட்டு காளி வேடம் அணிந்து விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார். இது தொடர்பாக சந்திரன் கூறியதாவது “தனது நோய் குணமாகியதால் சென்ற 4 வருடங்களாக சுடுகாட்டு காளி வேடமணிந்து 21 நாட்கள் அன்ன ஆகாரம் உண்ணாமல் சுடுகாட்டில் 6 அடி ஆழ குழி தோண்டி அதில் தங்கி இரவு பகல் வசித்து வருகிறேன். முத்தாரம்மனின் ஒரு அவதாரம் சுடுகாட்டு காளி” என்று கூறினார். இவரிடம் அருள் வாக்கு பெறுவதற்காக பெரும்பாலான பக்தர்கள் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.