பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சித்துடையார் காலனி தெருவில் மூக்காயி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் மூக்காயிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய மணிகண்டன் என்ற மகன் உள்ளார். சிறு வயதிலிருந்தே மனநலம் பாதிக்கப்பட்டதால் மூக்காயி மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் திருமணமான 6 மாதங்களில் மூக்காயியின் கணவர் அவருடன் வாழ பிடிக்காமல் அவரை வீட்டில் இருந்து அனுப்பி விட்டார்.
இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் சுடுகாட்டுக்கு சென்ற மூக்காயி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.