அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களின் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்காது நிலையில் எதற்காக அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது என்றால் சித்திரை மாதம் பரணி 3 -ஆம் பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலமே அக்னி நட்சத்திரம் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது.
அக்னி நட்சத்திரம் என்பது சித்திரை மாதம் இறுதி பதினோரு நாட்கள், வைகாசி மாதம் முதல் பத்து நாட்கள் இணைந்த பகுதியாகும். இந்த நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும் , இடையிலே நாட்கள் மிக அதிகமாகும், கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பத்தை தரும். இவ்வாறு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் இருக்கும் நாட்களே அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படுகின்றன.